அவருடைய பரிசுத்தவான்கள்


 அவருடைய பரிசுத்தவான்கள்

உபாகமம் 33:3

மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள். 

1. அன்பு கூரும் பரிசுத்தவான்கள்

சங்கீதம் 31:23

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள், உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். 

2. தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள்

எண்ணாகமம் 16:7

நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள், அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தனாயிருப்பான், லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப் போகிறீர்கள் என்றான். 

3. அவருடைய கரத்தில் இருக்கும் பரிசுத்தவான்கள்

உபாகமம் 33:3

மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

4. ஸ்தோத்திக்கும் பரிசுத்தவான்கள்

சங்கீதம் 145:10

 கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும், உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். 

5. ஜெபிக்கிற பரிசுத்தவான்கள்

வெளி- 5:8

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: 

6.ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் பரிசுத்தவான்கள்

தானியேல் 7:18

ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *