ஆண்டவரின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

1) மற்ற 9 பேர் எங்கே ? (லூக் 17:17,18) 

ஆண்டவரிடத்தில் ஆசிர்வாத்த்தையும், நன்மையும் பெற்ற நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேற்கண்ட சம்பவம் நமக்கு நன்கு தெரியும். 10 குஷ்டரோகிகள் சுகமானர்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் வந்து தேவனை மகிமைபடுத்துகிறான். நீ குடிக்கும் ஒரு தம்ளர் தண்ணீர்க்கு கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். தேவ பிள்ளையே உனது வாழ்க்கையில் நீ அனுபவிக்கும் ஒவ்வொரு ஆசிர்வாத்த்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்த மறந்து விடாதே (சங் 103:2). உங்கள் பிள்ளைகளை கூட சிறு வயதில் இருந்து இந்த அனுபவத்தில் நடத்துங்கள். குடும்ப  ஜெபத்தில் பிள்ளைகளை 5 நிமிடம் ஸ்தோத்திரம் பண்ண (பெற்ற ஆசிர்வாதத்திற்காக) செய்யுங்கள். 

2) ஒரு மணி நேரமாவது என்னோடு விழித்திருக்க கூடாதா ? – லூக் 26:49 

சிஷர்கள் இடம் கேட்ட இன்று இயேசு  உன்னை பார்த்து இயேசு கேட்கிறார்.

இயேசுவின் வருகையில் காணப்பட நம்மிடம் இருக்க வேண்டிய ஒரு காரியம் எப்பொழுதும் ஜெபம் (லூக் 21:36) ஜெபத்தில் சோர்வு கூடாது (லூக் 18:1) தாவிதுக்கு அநேக போராட்டம் இருந்தது.  ஆனாலும் அவன் அந்தி, சந்தி மத்தியான நேரத்தில் ஜெபித்தான்.

ஜெபத்தில் உறுதியாய் இருங்கள் (ரோ 12:12) 84 வயது விதவை இரவும் பகலும் ஜெபம் செய்தாள். (லூக் 2:34)

எலிப்பாஸ் யோபுவிடம் நீர் தேவனுக்கு முன்பாக ஜெப, தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். 

(யோபு 15:4) என்றான். உன்னுடைய ஜெபம் அதிகரிக்கிறதா ? குறைகிறதா ? கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய ஜெபம் அவசியம் (1 தீமோ 2:2)

3) விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்நதியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் ( மத் 17:17)

எந்த சூழ்நிலையிலும் நமது விசுவாசம் குறைய கூடாது. நமது விசுவாசம் சோதிக்கபடும் (1 பேது 1:7) விசுவாசத்தில் பலவினமாக இருக்க கூடாது ( ரோ 4:19). விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்கு 9-23)  தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரேயர் 11:6)

அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை (மத்தேயு 13-58)

4) நற்கனிக்கு பதிலாக கசப்பான கனி (ஏசா 5:1-5) 

கரத்தர் இஸ்ரவேல் ஐனங்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்பார்த்தார் எவ்வளவு ஏமாற்றம் அடைந்தார் என்பதை மேலே கண்ட வசனத்தில் காணலாம்.

 கனி = நல்ல சுபாவம், நல்ல குணங்கள்

மனம் திரும்புதலுக் கேற்ற கனிகளை கொடுங்கள் (மத் 3:7,8)

சுபாவ மாற்றம் ஒரு நாளில் நடப்பது இல்லை. சுபாவம் (கனி கொடுக்க) மாற காலம் கொடுக்கபட்டுள்ளது. லூக் 13:6-9 ல் 3 வருடம் கனி கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம். கர்த்தர் வளரும் வரை பார்ப்பார், வளர்ந்த  பிறகு  நீ கனி  கொடுக்காவிட்டால் வெட்டப்படுவாய் (மத் 7-19)  தன் காலத்தில் தன் கனியை தந்து என்று சங் 1:1-3 ல் வாசிக்கிறோம். போய் கனி கொடுங்கள் (யோ 15-16) என்றார்.

 இஸ்ரவேல் ஜனங்கள் கெட்டு போக காரணம் அவர்கள் சுபாவம் மாறவில்லை. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து கானானுக்கு ஒரே நாளில் கூட்டி சென்று இருப்பார், 40 வருடங்கள் ஆக காரணம் அவர்கள் குணம் (சுபாவம்) மாறவில்லை. வீட்டில்/குடும்பத்தில்/office ல்  உங்கள் இடம் என்னென்ன கெட்ட சுபாவம் தினமும் வெளிபடுகிறது ? இரவில் ஒரு list எடுத்து பாருங்கள். இன்றைக்கு உலக மனிதர்கள் இடம் காண்கிற அநேக நல்ல சுபாவங்கள் விசுவாசிகள், ஊழியர்கள் இடம் இல்லை. தேவ ஜனமே மனம் திரும்பு 

5) நீ அநேக காரியங்களை குறித்து கவலைபட்டு கலங்குகிறாய் (லூக் 10:41)

 தேவ பிள்ளைகள் உலக காரியங்களுக்காக கவலை படக்கூடாது.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7)

ஒன்றுக்கும் கவலைபடாமல் என்று பிலி 4:8 ல் வாசிக்கிறோம். உலக கவலை இருந்தால் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியாது (மாற் 4:18). இருதயம் பாரம் அடையும் (லூக் 21:34) இருதயத்தை ஒடுக்கும் (நீதி 12:25)

6) வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே (லூக் 24:25-26) 

இயேசு சிலுவையில் அறையப்பட போவதையும், 3 நாள் கழித்து எழுந்திருக்க போவதையும் சிஷர்களுக்கு பல முறை சொல்லி இருந்தார். இயேசுவின் வார்த்தைகளை சிஷர்கள் முற்றிலும் மறந்து விட்டார்கள். எம்மாவூருக்கு சென்ற சிஷர்கள் கர்த்தருடைய வார்த்தையை மறந்த காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு வந்து விட்டது. நமது வாழ்க்கையில் ஆண்டவருடைய வசனத்தை நாம் நம்புவதற்கு மந்த இருதயமுள்ளவர்களாக மாறும் போது இயேசுவின் இருதயம் வேதனையடைகிறது, ஏமாற்றம் அடைகிறது. ஆண்டவர் சொன்ன வார்த்தைகள், வாக்குத்தத்தங்களை அடிக்கடி நினைவு கூற வேண்டும், அதை உரிமை பாராட்டி உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

7) இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா (யோ 21:15)

தேவன் அன்பில் வைராக்கியம் உள்ளவர். இந்த உலகில் எல்லாரை காட்டிலும் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

 மத் 10 :37 உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதிருங்கள- 1 யோ 2:15 

ஆபிரகாம் தன் மகனை விட இயேசுவை அதிகம் நேசித்தான் (அதனால் தான் இயேசுவின்  வார்த்தைக்கு கீழ்படிந்து ஈசாக்கை பலியிட துணிந்தான்)

கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார் ? – ரோ 8:36. தேவ அன்பு இருந்தால் தான் உபத்திரவங்களை சகிக்க முடியும்.உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் – யோசு 23 :11


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *