ஆராதனை
நாம் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் (எபி 12:28)
-
கருப்பொருள் : வேதத்தில் ஆராதனை
-
தலைப்பு : ஆராதனை
-
ஆதார வசனம் : எபி 12:28
-
துணை வசனம்: உபா 6:16; நியா 1:16; 1சாமு 7:3
1. தேவனுக்குப் பிரியமான ஆராதனை (எபி 12:28)
-
பயத்தோடு செய்வது (எபி 12:28)
-
பக்தியோடு செய்வது (எபி 12:28)
-
நடுக்கத்தோடு செய்வது (சங் 2:11)
2. புத்தியுள்ள ஆராதனை (ரோ 12:1)
-
சரீரங்களை பரிசுத்தமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
-
தேவனுக்குப் பிரியமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
-
ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
3. சுத்த மனச்சாட்சியுள்ள ஆராதனை (2தீமோ 1:4)
-
தேவனை சுத்த மனச்சாட்சியோடு ஆராதிக்க வேண்டும் (2தீமோ 1:4)
-
சுத்த மனச்சாட்சி உத்தமராக விளங்கப்பண்ணும் (1கொரி 4:2)
-
இயேசுவின் இரத்தம் மனச்சாட்சியைச் சுத்திகரிக்கிறது (எபி 9:14)
4. இடைவிடாத ஆராதனை (தானி 6:16)
-
12 கோத்திராத்தாரும் இடைவிடாமல் ஆராதிக்கிறார்கள் (அப் 26:7)
-
வயதான விதவை இரவும் பகலும் தேவனை ஆராதித்தாள் (லூக் 2:37)
-
தானியேல் இடைவிடாமல் தேவனை ஆராதித்தார் (தானி 6:16)
5. சுயஇஷ்டமான ஆராதனை (கொலோ 2:23)
-
மாயமான தாழ்மையோடு செய்வது (கொலோ 2:23)
-
தேவ மகிமைக்கு முன்னுரிமை தராமல் செய்வது (அப் 12:23)
-
மனிதரைப் பிரியப்படுத்தி செய்வது (கலா 1:10)
6. விக்கிரகங்களுக்குச் செய்யும் ஆராதனை (கொலோ 2:19)
-
சூரிய நட்சத்திரங்களை தொழுதுகொள்வது (உபா 4:19)
-
சுரூபங்களைத் தொழுதுகொள்வது (எசே 8:10,11)
-
அந்நிய தேவர்களைப் பணிந்துகொள்வது (யாத் 23:24)
7.வீணான ஆராதனை (மாற் 7:7)
-
வீணானவைகளைப் பின்பற்றக் கூடாது (1இரா 17:15)
-
விணானவைகளுக்காக தங்கள் மகிமையை மாற்றுதல் (எரே 2:21)
-
வீணானவைகளைச் சேவிப்பது தேவகோபத்தை உண்டாக்கும் (1இரா 16:26)
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்ச
சிந்தனையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள்
பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை
வஞ்சியாதிருக்கப்பாருங்கள் (கொலோ 2:19)