இனி இல்லை
எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
1.நீ இனி அலைந்து திரிவதில்லை(அருவருப்புகளை அகற்றிவிடு)
எரேமியா 4:1இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை(உன் பொருத்தனைகளை செலுத்து)
நாகூம் 1:15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது. யூதாவே, என் பண்டிகைகளை ஆசரி. உன் பொருத்தனைகளைச் செலுத்து. துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.
3.அந்நியர் இனி உன்னை அடிமைகொள்வதில்லை
எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை.
4.இனித் தொய்ந்துபோவதில்லை(சீயோனின் அனுபவத்திற்க்குள் வர வேண்டும்)
எரேமியா 31:12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள், அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும், அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
5.அந்நியர்(உலக காரியங்கள்) இனி உன்னை கடந்து போவதில்லை.(பரிசுத்த தேவனை அறிந்துக்கொள்ள வேண்டும்)
யோவேல் 3:17 என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியர் இனி அதைக் கடந்து போவதில்லை.
6.இனித் தாமதிப்பதில்லை(கர்த்தர் சொன்ன காரியம் எல்லாம் நடக்கும்)
எசேக்கியேல் 12:28 ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
0 Comments