இயேசுவின் பாதம் ஒன்றே போதும்

1. இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுங்கள்

லூக்கா 10:38,39 மார்த்தாள் இயேசுவைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின்

பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்

லூக்கா 8:35 பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தித்தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தனர்

2. இயேசுவின் பாதத்தில் விழுந்திடுங்கள்

மாற்கு 5:22 ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து,அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:

மாற்கு 7:25 அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய் அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்

லூக்கா 17:16 சமாரியன் அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து

யோவான் 11:32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:

3. இயேசுவின் பாதத்தில் வைத்திடுங்கள்

மத்தேயு 15:30; மாற்கு 6:56 அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய

அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை

அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

4. இயேசுவின் பாதத்தைக் கழுவிடுங்கள்

லூக்கா 7:38; யோவான் 12:3 மரியாள் அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால்

நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து,

பரிமளதைலத்தைப் பூசினாள்

யோவான் 11:2 கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய

பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே

5. இயேசுவின் பாதத்தைத் தழுவிடுங்கள்

மத்தேயு 28:9 அவர்கள் (மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்) அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *