இரண்டு வித அலங்காரம்


 

இரண்டு வித அலங்காரம்

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது

 (1 பேதுரு 3:3,4)

1. புறம்பான அலங்காரம் (1 பேதுரு 3:3)

2. உள்ளான அலங்காரம் (1 பேதுரு 3:4).

  1. வெளியே தெரியும் அலங்காரம் (1 பேதுரு 3:3).

   2. மறைந்திருக்கிற அலங்காரம்  (1 பேதுரு 3:4).

1. சரீரத்தில் செய்யப்படும் அலங்காரம் (1 பேதுரு 3:3)

2. ஆவியில்(சிந்தையில்) பெற்றுக்கொள்ளும் அலங்காரம் (1 பேதுரு 3:4)

1. மயிரைப் பின்னுவது, பொன் ஆபரணங்களை அணிவது, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துவது (1 பேதுரு 3:3).

2. சாந்தமும் அமைதலுள்ள ஆவியால் அலங்கரிப்பது (குணத்தால்) (1 பேதுரு 3:4).

1. விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (1 பேதுரு 3:3)

2. விலையேறப்பெற்றது (1 பேதுரு 3:4).

1. அழியக்கூடிய அலங்காரம் (1 பேதுரு 3:3)

2. அழியாத அலங்காரம்  (1 பேதுரு 3:4).

1. பூமிக்குரிய மனைவியின் அலங்காரம் (1 கொரி. 7:34).

2. கிறிஸ்துவின் மணவாட்டியின் அலங்காரம் (சங். 45:13).

உங்களுடைய அலங்காரம் எது? புறம்பான அலங்கரிப்பா? உள்ளான அலங்கரிப்பா? உங்களைப் பார்த்தால் தேவனுடைய பிள்ளை என்ற வெளிப்படையான அடையாளம் இருக்கிறதா? பழைய ஏற்பாட்டு சபை மற்றவர்களை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட சபையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது (எண். 23:9). புதிய ஏற்பாட்டு சபையாரும் மற்ற மார்க்கத்தினரை விட்டு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் அஸ்திபார உபதேசம் (அப். 2:40). இதுவே இரட்சிக்கப்பட்டவர்களின் அடையாளம். இதுவே புதிய ஏற்பாட்டு இரட்சிப்பு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *