இளைப்பாறுதல் யாருக்கு

மத்தேயு 11:28

 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 

1. அவர் நுகத்தை ஏற்றுக் கொண்டு , அவர் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்.

மத்தேயு 11:29  நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 

(மத் 11:30 – 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் )

2. அவர் சமூகம் (பிரசன்னம்) இருக்கும் இடத்தில் இளைப்பாறுதல்

யாத்திராகமம் 33:14  அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். 

3. நல்ல வழியில் நடக்க வேண்டும்.

எரேமியா 6:16  வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். 

(நமக்கு பழக்கப்பட்ட , தெரிந்த வழிகளில் அல்ல தேவன் சொல்லுகிற வழியில் நடக்க வேண்டும்.)


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *