உத்தமமாய்

சங்கீதம் 84:11

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். 

1. உத்தமமாய் அவரே பின்பற்ற வேண்டும்(அவருக்கு பின்னால் நடப்பது)

எண்ணாகமம் 14:24 ,32:11

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 

(காலேப் உத்தமமாய் பின்பற்றியதால் சுதந்தரிக்கும் ஆசிர்வதத்தை கொத்தார்)

2. உத்தாமாமய் தேவனோடே சஞ்சரிக்க வேண்டும்(அவர் ரோடு கூட நடப்பது)

ஆதியாகமம் 6:9

நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். 

3. உத்தமாமய் அவருக்கு முன்பாக நடக்க வேண்டும்.

ஏசாயா 38:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். 

2 இராஜாக்கள் 20:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். 

4. உத்தம இருதயத்தோடே தேவனுக்கு கொடுக்க வேண்டும்

1 நாளாகமம் 29:17

 என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன், இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன், இப்போழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன். 


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *