உன்னதமானவர்


 உன்னதமானவர்

சங்கீதம் 92:8

கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர். 

1.உன்னதமானவரின் தயவினால் அசைக்கபடாதிருப்போம்(உறுதிப்படுத்துவார்)

சங்கீதம் 21:7

ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்;, உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். 

(இதற்க்கு நாம் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்க வேண்டும்)

2.உன்னதமானவரின் மறைவில் நம்மை பாதுகாப்பார்

சங்கீதம் 91:1

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 

(கர்த்தருடைய வசனமே நமது மறைவிடம்)

3.உன்னதமானவரின் பலம் கூடாதவைகளை எல்லம் கூட செய்யும்

லூக்கா 1:35

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். 

(இதற்க்கு நம் எஜமான் என்ன சொல்லுகிறாரோ அதைமட்டும் செய்ய வேண்டும்.)

4. உன்னதமான தேவனின் ஆசிர்வாதம்

ஆதியாகமம் 14:19

அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. 

(இதற்க்கு ஆபிராம் போல் கர்த்தரையே விசுவாசிக்க வேண்டும்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *