உன்னதரின் நிழல்
உன்னதமானவரின் மறைவிலிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் (சங் 91:1)
தலைப்பு : தேவனின் நிழலால் வரும் நன்மைகள்
கருப்பொருள் : உன்னதரின் நிழல்
ஆதார வசனம் : நீதி 91:1
துணை வசனம் : சங் 121:5; ஏசா 4:6; 32:2
1.தப்புவிக்கப்படுகிறோம் (யோபு 33:18)
வேடனுடைய கண்ணிக்கு (சங் 91:3)
ஜனங்களின் சண்டைகளுக்கு (சங் 18:43)
கொடுமையான மனுஷனுக்கு (சங் 18:48)
2. பயத்துக்கு நீங்கலாக்கப்படுகிறோம் (மத் 14:26,27]
இரவில் உண்டாகும் பயங்கரம் (சங் 91:3)
பகலில் பறக்கும் அம்பு (சங் 91:3)
இருளில் நடமாடும் கொள்ளைநோய் (சங் 91:3)
3. தீங்குக்கு நீங்கலாக்கப்படுகிறோம் (சங் 121:7)
யாக்கோபை தீங்கு தொடரவில்லை (ஆதி 31:7)
யாபேஸை தீங்கு தொடரவில்லை (1நாளா 4:10)
பவுலை தீங்கு அணுகவில்லை (அப் 28:5)
4. காக்கப் படுகிறோம் (சங் 41:2)
கர்த்தர் காலேபைக் காத்தார் (யோசு 14:10)
சீறுகிறவர்களினின்று காக்கிறார் (யோவா 4:38)
கர்த்தர் சவுலிடமிருந்து தாவீதைக் காத்தார் (1சாமு 18:11)
5. விடுவிக்கப் படுகிறோம் (சங் 37:40)
இஸ்ரவேலரை எகிப்தியரிடமிருந்து விடுவித்தார் (யாத் 6:6,7)
எல்லா சத்துருவின் கைகளுக்கும் தாவீதை விடுவித்தார் (2சாமு 22:1)
ஜனங்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிக்கிறார் (ஓசி 13:14)
6. மறைக்கப் படுகிறோம் (ஏசா 49:2]
பின்தொடர்ந்து வருபவர்களுக்கு மறைத்து வைக்கிறார் (யோசு 6:25)
தேவகோபத்துக்கு நீங்கலாக்கி மறைக்கப்படுகிறோம் (யோபு 14:13)
தீங்குக்கு தப்பும்படி கூடாரத்தில் மறைத்து வைக்கிறார் (சங் 27:5)
7.பலப்படுத்தப் படுகிறோம் (லூக் 1:35)
ஜெபத்தில் பலப்படுத்தப்படுகிறோம் (லூக் 22:43)
ஊழியத்தில் பலப்படுத்தப்படுகிறோம் (கலா 2:7)
முழங்கால்களைப் பலப்படுத்துகிறார் (தானி 10:10)
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள் (சங் 36:7)
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங் கன்மலையின் நிழலாகவும் இருப்பார் (ஏசா 32:2)
One comment on “உன்னதரின் நிழல்”
Nayagam
18/09/2024 at 10:16 amPraise the lord