உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12). 

ஆயத்தமில்லாமல், திடீரென்று தேவனைச் சந்தித்தால், என்ன நேரிடும்?

  • 1. யோவான் :-

  • நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; (வெளிப்படுத்தல் 1:17)

  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் அன்பாயிருந்த சீசனாகிய ஆகிய யோவான், இயேசுவை மனுஷீகமாகவே இயேசுவை அதிகமாக அறிந்தருந்தபடியால்,

  • திடீரென்று கிறிஸ்துவின் கண்களை அக்னி ஜுவாலையாக பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தத, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரச்சல் போலவும் இருந்ததைக் கண்டு, மிகவும் பயந்து விட்டார்.

  • 2. பவுல்:-

  • அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். (அப்போஸ்தலர் 9:3,4)

  • 3. ஏசாயா:-

  • அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5) தேவ சந்திப்பு, ஏசாயாவில் பாவ உணர்வை ஊட்டி விட்டது.

  • 4. மோசே:-

  • மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். (யாத்திராகமம் 3:6). உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; (ஏசாயா 59:2).

  • 5. யோபு:-

  • என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். (யோபு 42:5,6).

வெளிப்படுத்தல் 1:7

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், .. ஆமென்…

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *