எது நல்லது அல்ல
1. மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல
*ஆதியாகமம் 2:18*
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
(மத்தேயு 18:19)
2. குற்றம் கண்டுபிடிக்கிறதும் , தண்டிக்கிறதும் நல்லதல்ல
*நீதிமொழிகள் 17:26*
நீதிமானைத் தண்டம்பிடிக்கிறதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
3. ஆத்துமாவை குறித்து அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல
நீதிமொழிகள் 19:2
ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல: கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
4.துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல
*நீதிமொழிகள் 18:5*
5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல.
5. ஞானமுள்ளவர்களின் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல
*நீதிமொழிகள் 24:23*
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
6.மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல
*1 கொரிந்தியர் 5:6*
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல. கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?