எந்த நிலையிலும் கர்த்தருடன்
(இருந்தாலும் இல்லாவிட்டாலும்)
*பிலிப்பியர் 4:11(10-19)*
நான் எந்த *நிலைமையிலிருந்தாலும்* மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
[12] *தாழ்ந்திருக்கவும்* எனக்குத் தெரியும், *வாழ்ந்திருக்கவும்* எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
1. கொன்றுபோட்டாலும் நம்புவேன்
*யோபு 13:15*
[15]அவர் என்னைக் *கொன்றுபோட்டாலும்* , அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
2. விடுவிக்காமற்போனாலும் ஆராதிப்பேன்
*தானியேல் 3:17-18*
[17]நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
[18] *விடுவிக்காமற்போனாலும்* , நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
3. இல்லாமற்போனாலும் மகிழுவேன்
*ஆபகூக் 3:17-18*
[17]அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு *இல்லாமற்போனாலும்* ,
[18]நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
4. சாய்ந்துபோனாலும் பயப்படேன்
*சங்கீதம் 46:1-3*
[1]தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
[2]ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் *சாய்ந்துபோனாலும்* ,
[3]அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.
5. அழிந்துபோனாலும் தங்குவேன்
*2 கொரிந்தியர் 5:1(1-5)*
[1]பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு *அழிந்துபோனாலும்* , தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
6. குடியிராமற்போனாலும் நாடுவேன்
*2 கொரிந்தியர் 5:9(7-11)*
[9]அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் *குடியிராமற்போனாலும்* அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.
7. வார்க்கப்பட்டுபோனாலும் வாழுவேன்
(ஊற்றப்பட்டுப்போனாலும்)
*பிலிப்பியர் 2:17(12-18)*
[17]மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் *வார்க்கப்பட்டுப்போனாலும்* , நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.