எழுதினார் கர்த்தர்
1. கற்பலகையில் எழுதினார்
யாத்திராகமம் 31:18 சீனாய் மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்
யாத்திராகமம் 32:16 பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவை களிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது
2. புஸ்தகத்தில் எழுதினார்
யாத்திராகமம் 32:32-33 தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரா னால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்தில் இருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்தில் இருந்து கிறுக்கிப்போடுவேன்.
சங்கீதம் 69:28; பிலிப்பியர் 4:3; வெளிப். 3:5; வெளிப் 20:12,15; வெளிப் 21:27; வெளிப் 22:19
3. சுவற்றில் எழுதினார்
தானியேல் 5:1-31 பெல்ஷாத்சார் ராஜா திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களை புகழ்ந்தார்கள். அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று… அப்பொழுது அந்த கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. (மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்)
4. தரையில் எழுதினார்
யோவான் 8:1-11 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார் கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
5. இருதயத்தில் எழுதினார்
எபிரெயர் 8:10; 10:16 என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
Author: Rev. M. Arul Doss .