ஏறெடு

சங்கீதம் 121:1

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். 

1. உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்

சங்கீதம் 123:1

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். 

2.தேவனுக்கு நேராக நம் முகத்தை ஏறெடுப்போம்

யோபு 22:26,27

அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். 

27. நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார். அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 

3. நம் கையை ஏறெடுக்க வேண்டும்

யாத்திராகமம் 17:11

 மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

புலம்பல் 2:19

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு, ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு, எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. 

4.இருதயத்தையும் தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்

புலம்பல் 3:40,41

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். 

41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். 


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *