கர்த்தரிடத்தில் இல்லாதவைகள்


 கர்த்தரிடத்தில் இல்லாதவைகள்

1. அவரிடத்தில் பாவம் இல்லை

1யோவான் 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை

யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்

எபிரெயர் 4:15 பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்…

2. அவரிடத்தில் குற்றம் இல்லை

லூக்கா 23:4,14,15,22; யோவான் 19:4,6 பிலாத்தும்,ஏரோதும் இயேசுவினி டத்தில் ஒரு குற்றத்தையும் காணவில்லை

மத்தேயு 27:4 யூதாஸ்: குற்றமில்லாத இரத்தத்தை காட்டிக்கொடுத்தேன்

1பேதுரு 1:19 பேதுரு: குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து

3. அவரிடத்தில் இருள் இல்லை

1யோவான் 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் இருளில்லை 

யோவான் 8:12; 9:5; 12:46 நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்

4. அவரிடத்தில் தீமை இல்லை

சங்கீதம் 5:4 தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை

ஆபகூக் 1:13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே 

5. அவரிடத்தில் அநீதி இல்லை

சங்கீதம் 92:13-15 கர்த்தர் உத்தமர், அவரிடத்தில் அநீதியில்லை 

யோபு 34:10 அநீதி சர்வவல்லவருக்கு தூரமாயிருக்கிறது.

ரோமர் 9:14 தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? 

எபிரெயர் 6:10 மறந்துவிடுவதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே 

6. அவரிடத்தில் பட்சபாதம் இல்லை

உபாகமம் 10:17 அவர் பட்சபாதம்பண்ணுகிறவர் அல்ல 

ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை

அப்போஸ்தலர் 10:34; கலாத்தியர் 2:6; எபேசியர் 6:9 பட்சபாதமில்லாத 

7. அவரிடத்தில் வேற்றுமை இல்லை

யாக்கோபு 1:16-17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்தில் இருந்து உண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்தில் இருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

Author: Rev. M. Arul Doss .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *