கர்த்தரைக் கவர்ந்தவர்கள் (புதிய ஏற்பாட்டில்)


       

கர்த்தரைக் கவர்ந்தவர்கள்   (புதிய ஏற்பாட்டில்)

1.கபடற்ற உத்தமனான நாத்தான்வேல்

யோவான் 1:47(43-51) 

[47]இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

2.தெரிந்துகொண்ட பாத்திரமான ச(ப)வுல்

அப்போஸ்தலர் 9:15(1-18) 

[15]அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

3.எழுந்து பிரகாசிக்கும் விளக்கான யோவான்ஸ்நானகன்

யோவான் 5:35(30-47) 

[35]அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

4.ஆச்சரியமூட்டும் விசுவாசியான  நூற்றுக்கதிபதி

லூக்கா 7:9(1-10)

[9]இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

5.அடியேனை நினைத்தருளும் என்று கெஞ்சிய கள்ளன்

லூக்கா 23:42,43(32-43) 

[42]இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

[43]இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!