கர்த்தரை கனம்பண்ணுங்கள்
Honour the LORD.
1 எப்படி கனம்பண்ண வேண்டும்?
உன் பொருளாலும் , உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.Honour the LORD with thy substance, and with the firstfruits of all thine increase: (நீதிமொழிகள்3:9)
வருமானம் வந்த உடனே (மாதவருமானமோ, தினமும் கிடைக்கும் வருமானமோ), முதன் முதலாக (First fruit) அதில் ஒரு சிறிய பங்கை,கர்த்தருக்கு( கடவுளுக்கு ) காணிக்கையாக கொடுக்கலாம்.
ஏழை ஊழியருக்கு கொடுக்கலாம்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.He that hath pity upon the poor lendeth unto the LORD; and that which he hath given will he pay him again.(நீதிமொழிகள் 19:17).
ஏழை விதவைகளுக்கு கொடுக்கலாம்.(அப்போஸ்தலர்6:1 & யாக்கோபு 1:27)
இயேசு சொன்னார்…. மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே (கடவுளுக்கே) செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.Verily I say unto you, Inasmuch as ye have done it unto one of the least of these my brethren(and sisters), ye have done it unto me. மத்தேயு5:40
2 கனம் பண்ணினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்..
மனிதர்கள் பார்வையில், குறைவுகள் இருந்தாலும் பூரண ஆசீர்வாதம்(Perfect Blessings) தருவார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஆவிக்குரிய செழிப்பு கிடைக்கும்.நீதிமொழிகள்3:10
சுய நலத்திற்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காக,பொருளாதார செழிப்பு உங்களுக்கு கிடைக்கும்.நீதிமொழிகள்3:10
கர்த்தர் நம்மை கனம்பண்ணுவார்.(1சாமுவேல் 2:30).
3 கணம்(மரியாதை) எங்கே?
கடவுள் கேட்கிறார் …குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் (எனக்குரிய மரியாதை) எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர்(படைகளின் கடவுள்) தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் ( தேவனுடைய ஜனங்களை) கேட்கிறார்; A son honoureth his father, and a servant his master: if then I(LORD JESUS) be a father, where is mine honour? and if I be a master, where is my fear? saith the LORD of hosts unto you, மல்கியா1:6
0 Comments