கர்த்தரை சேவியுங்கள்
கர்த்தரை சேவியுங்கள்
சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
1.மற்ற தேவர்களை(தேவனின் ஸ்தானத்தில் ஏது எடுத்தலும் அது விக்கிரகம் ஆகும்) அகற்றிவிட்டு கர்த்தரைச் சேவிக்க வேண்டும்
- யோசுவா 24:14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
- பலிபீடத்தைச்(நம்முடைய ஜீவன்) செப்பனிட்டு சேவிக்க வேண்டும்
- 2 நாளாகமம் 33:16 கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
3.கர்த்தருக்கு உடன்பட்டு சேவியுங்கள்
- 2 நாளாகமம் 30:8 இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள், நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள், அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.
4.அன்புகூர்ந்து உன் முழு இருதயத்தோடும் கர்த்தரைக் கேலிக்க வேண்டும்
- உபாகமம் 10:12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,