களைத்து விடு
எபேசியர் 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
1.பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடு
கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
2. பொய்யை களைந்து மெய்யை பேசு
எபேசியர் 4:22 to 25
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
24. மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25. அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
3.மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்து எரிய வேண்டும்
கொலோசெயர் 2:11
அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
4. அக்கிரமம் நிறைந்த அழுக்கு வஸ்திரங்களை களைந்து போடுங்கள்
சகரியா 3:4
அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேலிருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
5. உலக முறைகளை களைந்துவிட்டு கர்த்தர் எதை நமக்கு வைத்திருக்கிராரோ அப்படியே நாம் இருப்போம்
1 சாமுவேல் 17:38 to 40
சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.
39. அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான். அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது. இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி அவைகளைக் களைந்துபோட்டு,
40. தன் தடியைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங் கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப் பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக் கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.