காத்துக்கொள்


 காத்துக்கொள்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். 

1.உன் ஆத்துமாவைச் ஜக்கிரதையாய்க் காத்துக்கொள்

உபாகமம் 4:10, லூக்கா 21:19

உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்,; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். 

2. உன் நாவைப் , உதடுகளையும் காத்துக் கொள்

சங்கீதம் 34:13

உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். 

3. போதகத்தை காத்துக்கொள்

நீதிமொழிகள் 4:136:20,7:2,3:21

 புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே: அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். 

4.உன் நடையைக் காத்துக்கொள்

பிரசங்கி 5:1

 நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். 

5.உன் கண்களைக் காத்துக்கொள்

எரேமியா 31:16

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். 

6.அரணைக்(தேவசமுகம்) காத்துக்கொள்

நாகூம் 2:1

சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான். அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. 

7.உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை காத்துக்கொள்

2 தீமோத்தேயு 1:14

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 

8.வஸ்திரங்களைக் காத்துக்கொள்

வெளிப்படுத்தின விசேஷம் 16:15

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *