காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
சங்கீதம் 118:25
கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
1. கர்த்தருக்கு உன் வழியை ஒப்புவித்து நம்பிக்கையாயிரு
சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
2. கர்த்தரை தேடும் போது காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்
2 நாளாகமம் 26:5
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான், அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்.
3. கர்த்தர் கூட இருந்தால் காரியங்கள் வாய்க்கும்
ஆதியாகமம் 39:3,23
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு,
23.கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.