கிறிஸ்துவுடனே கூட


 

கிறிஸ்துவுடனே கூட

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 

1.கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்படுதல் வேண்டும்

கலாத்தியர் 2:20

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 

2.கிறிஸ்துவுடனேகூட மரிக்க வேண்டும்

ரோமர் 6:8

ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 

3.கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட வேண்டும்

ரோமர் 6:4

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 

4.கிறிஸ்துவுடனேகூட எழும்ப வேண்டும்

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 

5.கிறிஸ்துவுடனேகூட உட்காரவும் வேண்டும்

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 

6.கிறிஸ்துவுடனேகூட மகிமைப்பட வேண்டும்

ரோமர் 8:17

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 

7.கிறிஸ்துவுடனேகூட நடக்க வேண்டும்

வெளிப்படுத்தி 3:4

4 ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *