கீலேயாத்
1 . கீலேயாத்- மலைப்பகுதி
_கீலேயாத் குன்றுகளாகவும் மலைகளாகவும் அமைந்துள்ள ஒரு உயர் மலைப்பகுதி._
_கீலேயாத் மலையில் கிடைக்கும் தைலம்தான்_
2. கீலேயாத் தைலம் பிசின் தைலம்
_சீத்திம் மரத்திலிருந்து கிடைப்பதும் பிசின்தான். தைலம் பிசு பிசு ன்னு இருப்பதால் பிசின் என்ற சொல். மருத்துவ குணம் வேறு வேறு._
3. கீலேயாத் என்ற பெயர் மனுஷனுக்கும் உள்ளது. யெப்தாவின் தகப்பன்.
_நியாயாதிபதிகள் 11: 11_
_கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவர் யெப்தா, அவர் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் மகன். அவர் தந்தை கிலேயாத் என்பவர்._
கீலேயாத்தின் தைலம் குணமாக்கும் தைலம்
_எகிப்தை நோக்கி இஸ்மயேல் வியாபாரிகள் கூட்டமாகப் பயணிக்கிறார்கள். கீலேயாத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்; அவர்களின் ஒட்டகங்கள் பிசின் தைலத்தையும், மற்ற பொருள்களையும் சுமந்து வருகின்றன. இந்த வியாபாரிகளிடம்தான் யோசேப்பின் அண்ணன்மார்கள் அவரை விற்றுவிடுகிறார்கள்._
_இச்சம்பவம் பைபிளிலுள்ள ஆதியாகமப் புத்தகத்தை வாசித்தவர்களுக்கு நன்கு பரிச்சயம்._
_(ஆதியாகமம் 37:25) மருத்துவ குணம் கொண்ட கீலேயாத்தின் பிசின் தைலத்திற்கு மத்தியக் கிழக்குப் பகுதிகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்._
_கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசி வருத்தத்தோடு இவ்வாறு கேட்டார்: “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ?”_
_(எரேமியா 8:22)_
_*எரேமியா இப்படிக் கேட்டதற்குக் காரணம் என்ன? சரி, இந்தப் பிசின் தைலம் எதிலிருந்து கிடைக்கிறது? நிவாரணமளிக்கும் ‘பிசின் தைலம்’ இன்றும் கிடைக்கிறதா?*_
பைபிள் காலங்களில் பிசின் தைலம்
_இந்தப் பிசின் தைலம் நறுமணம் உள்ளதாகவும், எண்ணெய்ப் பசை உள்ளதாகவும் இருந்தது;_
_இது பலவகை தாவரங்கள் மற்றும் புதர்ச் செடிகளிலிருந்து கிடைத்தது. தூபப் பொருள்களையும் வாசனைப் பொருள்களையும் தயாரிக்க இந்தத் தைலம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது; பண்டைய கால மத்தியக் கிழக்கு நாடுகளில் இது ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்தது. இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து வந்த சில காலத்திற்குப் பிறகு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினார்கள்; அங்கே பயன்படுத்தப்பட்ட அபிஷேகத் தைலத்திலும் தூபப் பொருள்களிலும் இந்தத் தைலம் சேர்க்கப்பட்டது._ _(யாத்திராகமம் 25:6; 35:8,) சேபா நாட்டு ராணி சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகளில் இந்தத் தைலமும் இருந்தது. (1 இராஜாக்கள் 10:2, 10, )_
_எஸ்தர், பெர்சிய ராஜா அகாஸ்வேருவின் முன்பு நிறுத்தப்படுவதற்கு முன்னால், “ஆறுமாதம் . . . வாசனைத் தைலங்கள், நறுமணப் பொருள்கள்” ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டாள்.—எஸ்தர் 1:1; 2:12_
_பிசின் தைலம் மத்தியக் கிழக்கிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தது; கீலேயாத்தின் பிசின் தைலமோ வாக்குபண்ணப்பட்ட தேசத்திலேயே கிடைத்தது. ஆம், யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்தான் கீலேயாத் இருந்தது. இஸ்ரயேல் மக்களின் மூதாதையான யாக்கோபு பிசின் தைலத்தை, “இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்து” என்று சொன்னார். அதை எகிப்தின் அதிபதிக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்._ _(ஆதியாகமம் 43:11) யூதாவும் இஸ்ரயேல் தேசமும் தீருவுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களில் அந்தத் தைலமும் இருந்ததாக எசேக்கியேல் தீர்க்கதரிசி குறிப்பிட்டார்._
_(எசேக்கியேல் 27:17)_
_இந்தப் பிசின் தைலம் ,அதன் மருத்துவ குணங்களுக்குப் பேர்போனது. இந்தத் தைலத்திற்குக் குணப்படுத்தவும் புத்துணர்வு அளிக்கவும் ,சக்தி இருந்ததெனப் பூர்வ இலக்கியப் புத்தகங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன;_ _முக்கியமாய், காயத்தை ஆற்றும் சக்தி அதற்கு இருந்ததாக அவை குறிப்பிடுகின்றன._
நோய்வாய்ப்பட்ட தேசத்திற்கு மருந்து
_“கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ” என எரேமியா ஏன் கேட்டார்? இதைத் தெரிந்துகொள்ள அன்றைய இஸ்ரயேல் தேசத்தாரின் நிலைமையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய மோசமான ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்பு இவ்வாறு வர்ணித்திருந்தார்: “உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால், காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை.”_
_(ஏசாயா 1:6)_