கைவிடாத தேவன்

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15)

கருப்பொருள் : யாரைக் கைவிடவில்லை?

தலைப்பு : கைவிடாத தேவன்

ஆதார வசனம் : ஆதி 28:15

துணை வசனம் : லேவி 26:44; உபா 4:31; யோசு 1:5

1. இஸ்ரவேல் ஜனங்களை (எரே 51:5)

  • பார்வோன் துரத்திக்கொண்டு வந்தபோது (யாத் 14:8) 

  • வனாந்தரத்தில் தண்ணீர் இல்லாமல் தவித்தபோது (யாத் 15:22)

  • அமலேக்கியர் யுத்தம்பண்ண வந்தபோது (யாத் 17:8)

2. சிறுமையும் எளிமையுமானவர்களை (ஏசா 41:17)

  •  எளியோரின் விண்ணப்பத்தை கேட்டு கைவிடாதிருக்கிறார் (சங் 69:33)

  •  எளியோரின் நியாயத்தை விசாரித்து கைவிடாதிருக்கிறார் (சங் 140:12)

  • கூப்பிடுகிற சிறுமையானவர்களை விடுவிக்கிறார் (சங் 72:12)

3. தமது ஜனத்தை (ஏசா 42:16)

  • சத்துருக்களின் தேசத்தில் குடியிருந்தாலும்… (லேவி 26:44)

  • தேவன் இரக்கமுள்ளவராய் இருக்கிறபடியினால் (உபா 4:31) 

  • தமது ஜனத்திற்கு முன்பாகப் போகிறவரானபடியினால் (உபா 31:8)

4. நீதிமானை (சங் 37:25)

  •  நீதிமானை தள்ளாட வொட்டாதிருக்கிறார் (சங் 55:22)

  •  நீதிமானின் சந்ததியோடே தேவன் இருக்கிறார் (சங் 14:5)

  •  நீதிமான்களின்மேல் நோக்கமாயிருக்கிறார் (சங் 34:15)

5. தேவனின் முகத்தைத் தேடுகிறவர்களை (சங் 9:10] 

  • தமது முகத்தைத் தேடின தாவீதை கைவிடவில்லை (சங் 27:6) 

  •  தமது முகத்தைத் தேடின தானியேலை கைவிடவில்லை (தானி 9:3)

  • தமது முகத்தைத் தேடின எசேக்கியாவை கைவிடவில்லை (எரே 26:19)

6. பிரமாணங்களைக் கைக்கொள்ளுகிறவர்களை (சங் 119:8)

  • பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் (சங் 119:16)

  •  பிரமாணங்களைத் தியானிக்க வேண்டும் (சங் 119:23)

  • பிரமாணங்களை மறக்கக் கூடாது (சங் 119:83)

7.இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுகிறவர்களை (எபி 13:5) 

  • பண ஆசையில்லாதவர்களாய் நடந்தால்… (எபி 13:5)

  • இருக்கிறவைகள் போதுமென்று எண்ணினால்… (எபி 13:5)

  • உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருந்தால்… (1தீமோ 6:8)

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15)

சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நரவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா 41:17)

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *