சாத்தானின் கண்ணிகள்
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்தும தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம் (சங். 124:7).
- விக்கிரகமாகிய கண்ணி
இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் தங்கள் உறவினர்களின் விக்கிரக சடங்களுக்கு செல்லக்கூடாது. ஏனென்றால் விக்கிரகங்களோடு சம்பந்தப்பட்ட சகலமும் சாத்தானின் கண்ணிதான் (யாத். 23:33, உபா. 7:16, நியா. 2:3, சங். 106:36).
- காதல் திருமணமாகிய கண்ணி
ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாவீதுக்கு சவுல் இரஜாவின் மகளை திருமணம் செய்வது அவனுக்கு சந்தோஷமாயிருந்தது (1 சாமு. 18:20). இராஜ குமாரத்தியை திருமணம் செய்வது தாவீதுக்கு பிரியமாயிருந்தது (1 சாமு. 18:26). இவ்விதமாக தாவீதுக்கு சவுல் இராஜா காதல் திருமணம் மூலம் கண்ணி வைத்தான். சவுல் இராஜாவின் மூத்த மகள் மேராவும் அவனுக்கு கிடைக்கவில்லை, இளைய மகள் மீகாவும் வேறொருவனுக்கு கொடுக்கப்பட்டாள் (1 சாமு 18:21, பிரசங்கி 7:26 நீதி. 7:23).
- அவிசுவாசிகளின் விருந்தாகிய கண்ணி
கிறிஸ்தவர்கள் பலவித உபதேசங்களை உடையவர்கள். பெயர்க்கிறிஸ்தவர்களின் திருமணத்திற்கு சென்று அங்கே பந்திசாப்பிடுவது ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கு கண்ணி (சங். 69:22, ரோமர் 11:9,10).
- மனுஷருக்கு பயப்படுகிற பயமாகிய கண்ணி
சத்தியம் தெரிந்த பலர் உபதேசம் கற்றுக்கொண்ட அநேகர் மனிதர்களுக்கு பயந்து உபதேசங்களை மறுதலிக்கிறார்கள். மனுஷருக்கு பயப்படுகிற பயம் சாத்தானின் கண்ணிதான் (நீதி. 29:25, 1 சாமு. 15:24).
- பிரிந்து செல்வதாகிய கண்ணி
தேவனிடம் கேபிரியேல், மிகாவேல், லூசிபர் என்ற மூன்று பெரிய அபிஷேகம்பண்ணப்பட்ட தேவதூதர்கள் இருந்தார்கள். லூசிபர் தன்னோடு உள்ள தூதர்களை விட்டு பிரிந்து போனான். தூதனாயிருந்தவன் தூதர் கூட்டத்தை விட்டு பிரிந்த பின்பு சாத்தானாக மாறிவிட்டான் (1 தீமோ. 3:7). அதே கண்ணியை இன்றும் பிசாசானவன் சில ஊழியர்களுக்குள்ளும், பல விசுவாசிகளுக்குள்ளும் சாத்தான் வைக்கிறான்.
- பண ஆசையாகிய கண்ணி
தேவ பிள்ளைகள் எல்லோரையும் தேவன் ஐசுவரியவானாக்குகிறதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே தேவன் ஐசுவரியத்தைக் கொடுக்கிறார். அநேகருக்கு படியை அளந்து போடுகிறார் (நீதி. 30:9, மத். 6:11). இப்படியிருக்க ஐசுவரியவான்களாக ஆசைப்பட்டு குறுக்கு வழியை கையாளுகிறவர்கள் சாத்தானின் கண்ணியில் அகப்படுகிறார்கள் (1 தீமோ.6:9).
- மாம்ச இச்சையாகிய கண்ணி
தேவன் மனிதனுக்குள் பாலுறைவை வைத்துதான் படைத்துள்ளார் (ஆதி. 1:28). ஆனால் அந்தப் பாலுறவை கட்டுப்படுத்தாமல் இஷ்டம்போல் ஆசைப்பட்டு பயன்படுத்துகிறவர்கள் மாம்ச இச்சைகளாகிய கண்ணியில் அகப்படுவார்கள் (2 தீமோ. 2:26). ஆவியின் கனி இச்சையடக்கம் தானே (கலா. 5:22).
நீங்கள் சாத்தானின் கண்ணியில் அகப்பட்ட சிம்சோனா? (நியா. 14:13).
அல்லது கண்ணியிலிருந்து தப்பின தாவீதா? (சங். 57:6).