சிலுவை தரிசனத்தை கண்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள்
1) கள்ளன் (லூக் 23:41,43) →தனது தவறுகளை கண்டு பிடித்தான், அறிக்கையிட்டான். பரதிசுக்கு போனான் (இயேசு அவனை பார்த்து இன்றைக்கு நீ என்னோடு பரதிசியில் இருப்பாய் என்றார்). தன் பிழைகளை உணருகிறவன் யார் (சங் 19:12)
2) 100 க்கு அதிபதி (லூக் 23:47)→ இயேசுவின் கிரியைகளை (சிலுவையில்) கண்டு 100 க்கு அதிபதி தேவனை மகிமை படுத்தினான். “மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரன்” (லூக் 23:47); என்று தேவனை மகிமைபடுத்தினான். நமது நடக்கையை மற்றவர்கள் பார்க்கிறார்கள். நம்மை பார்க்கிற ஜனங்கள் தேவனை மகிமைபடுத்த வேண்டும்.
3) யூதாஸ் (மத் 27:1-5)→ நான்று கொண்டு செத்தான் (தூக்கு போட்டு செத்தான்). யூதாஸின் எண்ணமெல்லாம் பணத்தின் மேல் இருந்தது. (உலக காரியத்தின் மேல் இருந்தது). 2 பேது 2:20
4) பேதுரு (மத் 26:70,71,75)→ உள்ளான மனந்திரும்புதல் பேதுருவிடம் காணப்பட்டது. இயேசுவை போல சிலுவையில் அறையப்பட நான் தகுதியுடையவன் அல்ல என்று கூறினான். தலைகீழாக சிலுவையில் அடிக்கபட்டான். யூதாஸின் மனமாற்றத்திற்கும் பேதுருவின் மனமாற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. 2 கொரி 7:9,10
5) சீமோன் (லூக் 23:26)→ சீமோன் சிலுவையை சுமந்தான். மத் 27:32 – பலவந்தமாய் சிலுவையை வைத்தார்கள். உபதேசம் பலவந்தம் பண்ணப்படுகிறது. சிலுவையை அனுதினமும் சுமக்க வேண்டும். நாம் சுமக்க வேண்டிய சில காரியங்களை சுமக்க கர்த்தர் பலவந்தம் பண்ணுகிறார்