சேனைகளின் கர்த்தர்
ஓசியா 12:5
கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன், யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
1. யுத்தம்பண்ணி நமக்கு ஆதராவாய் இருப்பார்
ஏசாயா 31:4,5
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
5.பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார், அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
2.சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்.
சகரியா 9:15
சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார். அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள். பானபாத்திரங்கள் போலவும் பலிபீடத்தின் கோடிகளைப் போலவும் நிறைந்திருப்பார்கள்.
3.சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
ஆமோஸ் 5:14
நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.