ஜீவனுள்ள தேவனுக்கு நாம் யார்?
சங்கீதம் 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
1.ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்(அவருக்குச் சொந்தமானவர்கள்)
ஓசியா 1:10
என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும், நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
2.ஜீவனுள்ள தேவனுடைய தாசன்(அவரை ஆராதித்து மகிமைப்படு்த)
தானியேல் 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
3.ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம்(அவர் வாசம் பண்ணும் வாசஸ்தலம் நான்)
2 கொரிந்தியர் 6:16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.