ஜெபியுங்கள்


 

ஜெபியுங்கள்

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் (கொலோ 4:2)

கருப்பொருள் : எப்படி ஜெபிப்பது?

தலைப்பு : ஜெபியுங்கள்!

ஆதார வசனம் : கொலோ 4:2

துணை வசனம்: யூதா 1:20; 1பேது 4:7; எபே 6:18

1. கண்ணீரோடு ஜெபியுங்கள் (எரே 9:1)

  •  ஆண்டவர் எருசலேமுக்காகக் கண்ணீரோடு ஜெபித்தார் (லூக் 19:42)

  • எரேமியா தன் ஜனங்கள்காகக் கண்ணீரோடு ஜெபித்தார் (புல 3:50)

  •  எசேக்கியா தனக்காகக் கண்ணீரோடு ஜெபித்தார் (2இரா 20:5)

2. கருத்தாய் ஜெபியுங்கள் [1கொரி 14:15)

  • எலியா மழைக்காக கருத்தாய் ஜெபித்தார் (யாக் 5:17)

  • அன்னாள் பிள்ளைக்காக கருத்தாய் ஜெபித்தாள் (1சாமு 1:11)

  • யாபேஸ் ஆசீர்வாதத்திற்காக கருத்தாய் ஜெபித்தார் (1நாளா 4:10)

3. பாரத்தோடு ஜெபியுங்கள் [கலா 6:2)

  •  ஜனங்களின் இரட்சிப்புக்காக பாரத்தோடு ஜெபியுங்கள் (ரோம 10:1)

  • நல்லாட்சி நடக்க ராஜாக்களுக்காக பாரத்தோடு ஜெபித்தல் (1தீமோ 2:2)

  • சபை பிசாசினால் கெடுக்கப்பட்டுப்போகாதபடி… (2கொரி 11:3) 

4. மன்றாடி ஜெபியுங்கள் (எஸ்தர் 7:3)

  • ஜனத்தின்மேல் தேவகோபம் மூளாதபடிக்கு மன்றாடுதல் (உபா 9:19) 

  • ஜனத்தின்மேல் தேவ இரக்கம் உண்டாக மன்றாடுதல் (உபா 10:10)

  •  ஜனங்கள் அழிவிலிருந்து காக்கப்பட மன்றாடுதல் (எஸ்தர் 8:6) 

5. போராடி ஜெபியுங்கள் (கொலோ 4:12)

  • யாக்கோபு ஆசீர்வாதத்திற்காக போராடி ஜெபித்தார் (ஆதி 32:24)

  •  பவுல் அவிசுவாசிகளுக்கு தப்பும்படி போராடி ஜெபித்தார் (ரோ 15:32) 

  • எப்பாப்பிரா சபையார் நிலைத்துநிற்கும்படி போராடி.. (கொலோ 4:12)

6. தாழ்த்தி ஜெபியுங்கள் (லூக் 18:14)

  •  தாழ்த்தி ஜெபிப்பதினால் ஷேமம் உண்டாகிறது (2நாளா 7:14)

  • ஆகாப் தாழ்த்தினதால் பொல்லாப்புக்கு தப்பினான் (1இரா 21:29)

  • ஆயக்காரன் தாழ்த்தி ஜெபித்ததால் நீதிமானாக்கப்பட்டான் (லூக் 18:13)

7. உண்மையாய் ஜெபியுங்கள் (சங் 145:8) 

  • உண்மை பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வைக்கும் (நீதி 28:20)

  • பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்தி சாட்சியாய் நிறுத்தும் (எண் 12:7)

  •  துர்க்குணத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்ளச் செய்யும் (சங் 18:23) 

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக் 5:16)

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செலிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம்

கொண்டிருக்கிற தைரியம் (1யோவா 5:14)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *