ஜெயங்கிடைக்கப்பண்ணும் தேவன்
எந்த சூழ்நிலையிலும் உங்கள் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவர் நம் இயேசு
மத்தேயு 12:20
அவர் (இயேசு) நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
1) கண்பார்வை அடைந்தவன் புறம்பே தள்ளிவிடப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு
யோவான் 9:35-37
யோவான் 9:1 (பிறவிக்குருடன்)
இயேசு தான் அவருக்கு ஆறுதலான தைரியம் கொடுத்தார்.
2) 38வருஷமாய் வியாதியோடு இருந்தவன் தம்மால் சுகமாக்கப்பட்டதை யூதர்கள் அந்த நாள் ஓய்வுநாள் என்றும் நியாயம் அல்ல என்று உதறித்தள்ளும்போது
இயேசு, இதோ நீ சொஸ்தமானாய்…
யோவான் 5:1 – 14
3) சிறுபிள்ளைகள் இயேசுவிடம் வர சீஷர்களால் அதட்டப்படும் போது.
மத்தேயு 19:13 & 14
இயேசு, சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்.
4) குருடர்கள் அதட்டப்படும் போது..
மத்தேயு 20:29-34
இயேசு நின்று, அவர்களை அழைத்து, அவர்கள்மேல் மனதுருகி, கண்களை தொட்டார். பார்வை அடைந்தார்கள்.
5) யவீருவின் வீட்டிலிருந்து சிலர் யவீருவிடம்
“உம்முடைய மகள் மரித்துப்போனாள்” என்று சொன்னவார்த்தையை கேட்டவுடனே,
பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று இயேசு சொல்லி..
மாற்கு 5:35,36-42
எந்த சூழ்நிலையிலும்
நெரிந்த நிலையில் இருந்தாலும், மங்கி எறிகிற அனுபவமாயிருந்தாலும், இயேசு உங்களுடைய நியாயத்திற்கு ஜெயம் தருவார்.
0 Comments