17.தம்மைப்போல  இருக்க விரும்பிய இறைவன் 

1.‌நீங்களும் பரிசுத்தராயிருங்கள்

லேவியராகமம் 19:2(1-18) 

 உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

1பேதுரு 1:15,16; லேவியராகமம் 11:44,45; 20:7,8,26; சங்கீதம்22:3 

2.‌நீங்களும் இரக்கமாயிருங்கள்

லூக்கா 6:36(20-38)

[36]ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

மத்தேயு 5:7; யாத்திராகமம் 33:19; ரோமர் 9:15,18; உபாகமம் 4:31; சங்கீதம் 78:38; 103:8; 145:8 

3.‌நீங்களும் அன்பாயிருங்கள்

யோவான் 13:34,35 

[34]நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் 15:9,12,19; 1பேதுரு 4:8; 1யோவான் 3:23; 4:7

4.‌நீங்களும் சற்குணராயிருங்கள்

மத்தேயு 5:48 (37-48) 

[48]ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

மத்தேயு 19:21

5.‌நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்

ரோமர் 15:7(1-7)

[7]ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மத்தேயு 18:35

6.‌நீங்களும் மன்னியுங்கள்

எபேசியர் 4:32

[32]ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

மத்தேயு 18:35

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *