24.தாயின் கருவினிலே…

   

1.தாயின் கருவில் அறிந்தவர்

எரேமியா 1:5

[5]நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் 

2.தாயின் கருவில் அழைத்தவர்

ஏசாயா 49:1

தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.

கலாத்தியர் 1:15 

3.தாயின் கருவில் ஆதரித்தவர்

சங்கீதம் 71:6

[6]நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே

4.தாயின் கருவில் உருவாக்கியவர்

ஏசாயா 44:24,2

[24]உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் 

5.தாயின் கருவில் எடுத்தவர்

சங்கீதம் 22:9,10

[9]நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.

6.தாயின் கருவில் ஏந்தியவர்

ஏசாயா 46:3

தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.

7.தாயின் கருவில் காத்தவர்

சங்கீதம் 139:13

[13]நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

Categories: தா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *