திடப்படுத்துங்கள்

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள் (ஏசா 35:3)

கருப்பொருள் : எவைகளை திடப்படுத்த வேண்டும்?

தலைப்பு : திடப்படுத்துங்கள்

ஆதார வசனம் : ஏசா 35:3

துணை வசனம்: லேவி 26:9; சங் 68:28; எரே 11:5

1. கைகளை [செப் 3:16)

  • நெகிழ்ந்த கைகளை நிமிர்த்த வேண்டும் (எபி 12:12)

  • கைகளைத் தளர விடக்கூடாது (செப் 3:16)

  • கைகளை தேவனுக்கு நேராக ஏறெடுக்க வேண்டும் (புல 2:12)

2. முழங்கால்களை (ஏசா 35:3)

  • தளர்ந்த முழங்கால்களைப் பலப்படுத்த வேண்டும் (ஏசா 35:3)

  •  தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்த வேண்டும் (யோபு 4:4)

  • தேவனுக்கு முன்பாக முடங்க பலப்படுத்த வேண்டும் (தானி 6:10)

3. மனதை [அப் 14:22]

  • பவுல் சீஷருடைய மனதை திடப்படுத்தினார் (அப் 14:22)

  • இயேசு தமது சீஷர்களுடைய மனதை திறந்தார் (லூக் 24:45)

  • பேதுரு நிரூபத்தினால் சபையாரின் மனதை நினைப்பூட்டினார் (2பேது 3:2)

4. இருதயத்தை (யோசு 24:23]

  • இருதயத்தைக் கடினப்படுத்தக் கூடாது (யாத் 9:34)

  • இருதயத்தை கர்த்தருக்கு நேராக்க வேண்டும் (யோசு 24:23)

  • இருதயத்தை தேவனிடத்தில் சாயப்பண்ண வேண்டும் (1இரா 8:58)

5.உள்ளான மனுஷனை (எபே 3:16]

  •  உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்பட வேண்டும் (2கொரி 4:16)

  • ஆவியினாலே உள்ளான மனுஷனில் பலப்பட வேண்டும் (எபே 3:16)

  • உள்ளாக பூரண மகிமையைக் கொண்டிருக்க வேண்டும் (சங் 45:13)

6. ஆத்துமாவை (சங் 33:18) 

  • வியாகுலப்படாதபடிக்குத் திடப்படுத்த வேண்டும் (சங் 6:3)

  • சோர்ந்துபோகாதபடிக்குத் திடப்படுத்த வேண்டும் (சங் 23:3)

  •  துக்கத்தால் துவண்டுபோகாதபடி திடப்படுத்த வேண்டும் (சங் 31:9)

7. திடனற்றவர்களை (1தெச 5:14)

  • திடனற்றவர்களைத் திடப்படுத்த வேண்டும் (1தெச 5:14)

  • ஒருவரும் அசைக்கப்படாதபடிக்கு திடப்படுத்த வேண்டும் (1தெச 3:2)

  • பயப்படுகிறவர்களை திடப்படுத்த வேண்டும் (அப் 27:25)

தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான் (1சாமு 30:6)

சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று

சொன்னார்கள் (அப் 14:22)

Categories: தி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *