33.திடமனதாயிருங்கள்
சங்கீதம் 31:24
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
1. கர்த்தர் கூடவே வருகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
உபாகமம் 31:6
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம், உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார், அவர் உன்னைக் விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
2. கர்த்தர் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
சங்கீதம் 31:24
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
3. கர்த்தர் சொன்னதையே நிறைவேற்றுகிறவர் எனவே திடமனதாயிருங்கள்
அப்போஸ்தலர் 27:25
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்.
0 Comments