தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு கிடைக்கும்  ஆசிர்வாதம்

சங்கீதம் 18:1

 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 

1.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்

யாத்திராகமம் 20:6

 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். 

2.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களை காப்பாற்றுகிறார்

சங்கீதம் 145:20

 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். 

3.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது

ரோமர் 8:28

 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 

4.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருப்பார்கள்

நியாயாதிபதிகள் 5:31

 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள். அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. 

Categories: தே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *