தேவனுடைய பிள்ளைகளகளுக்கு உதவி செய்து ஆசிர்வாதத்தை பெற்றவர்கள்
(ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை அடையாமல் போகான் (மாற் 9-41) →
1) ஆபிரகாம் தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு உபசரித்தார் (ஆதி 18:1-10)
தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தன் மூலம் கர்த்தர் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையை கட்டளையிட்டார்.
2) லோத்து தூதர்களுக்கு அப்பங்களை சுட்டு விருந்து பண்ணினான் (ஆதி 19:1-16)
அதனால் பொல்லாத மனுஷர் கைகளில் இருந்து தப்புவிக்கபட்டான்.
3) சுனேமியாள் எலிசா தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்டு சகல பணிவிடைகளை செய்தாள். வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஆகாரம் கொடுதது போஷித்தாள். அதுமட்டுமல்ல தங்கி செல்ல ஒரு அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். (2 இரா 4:8-17)
இதனால் பிள்ளை இல்லாத சுனேமியாளுக்கு குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மரணம் அடைந்த குழந்தைக்கு உயிர் வந்தது. தேசத்தில் பஞ்சம் உண்டாவதற்கு முன் அறிவிக்கபட்டு காப்பாற்ற படுகிறாள்.
4) சாரிபாத் விதவை எலியா தீர்க்கதரிசிக்கு ஆகாரம் (அடை) கொடுத்ததினால் அவளது வறுமை நீங்கியது (1 இரா 17:10-15)
சாப்பிட்டு செத்து போக வேண்டியவள் அநேக நாள் சாப்பிட்டாள். காப்பாற்றபட்டாள்.
5) ரெபேக்காள் ஆபிரகாம் ஊழியக்காரர்க்கும், 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். ஒட்டகங்கம் தண்ணீர் அதிகம் குடிக்கும்.
இதனால் ஈசாக்கை மணவாளனாக பெற்றாள்.
6) மார்த்தாள், மரியாள் இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள் (லூக் 10-38)
இதனால் லாசரு உயிரோடு எழுப்பபட்டான்.
7) பேதுரு தனது படகை ஆண்டவருக்கு கொடுத்தபடியால் (பிரசங்கம் பண்ண) (லூக் 5-3)
2 படகு நிறைய மீன்கள் கிடைத்தது (இரவு முழுவதும் ஒன்றும் கிடைக்கவில்லை)
0 Comments