தேவனோடு உறவாடியவர்கள்


 தேவனோடு உறவாடியவர்கள்

1. தேவனோடு நடமாடிய நோவா

ஆதியாகமம் 6:8-10  நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்தான் 

ஆதியாகமம் 7:1 கர்த்தர் நோவாவை நோக்கி:  நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். 

ஆதியாகமம் 6:22; ஆதியாகமம் 7:5 நோவா தேவன் தனக்குக் கட்டளை யிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

ஆதியாகமம் 8:1 நோவாவையும், மிருகங்களையும் நினைத்தருளினார் 

ஆதியாகமம் 9:1 நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்தார்

2. தேவனோடு போராடிய யாக்கோபு

ஆதியாகமம் 32:26-28(24-32) உன்பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

ஆதியாகமம் 25:26-27 யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்

ஆதியாகமம் 35:1-15  யாக்கோபு பதான் அராமில் இருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று பேரிட்டார்

ஓசியா 12: 1-6  யாக்கோபு தன் பெலத்தினால் தேவனோடே போராடி னான். அவன் தூதனோடே போராடி மேற்கொண்டான்.

3. தேவனோடு உரையாடிய மோசே

யாத்திராகமம் 33:9-11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்.

எண்ணாகமம் 12:8 நான் மோசேயுடன் மறைபொருளாக அல்ல, முகமுக மாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்

எண்ணாகமம் 7:89 மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத் திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்

உபாகமம் 4:12 அக்கினியின் நடுவில் இருந்து கர்த்தர் பேசினார்

உபாகமம் 34:12 கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கத்தரியும் இஸ்ரவேலிலே அப்புறம் எழும்பினதில்லை

Author: Rev. M. Arul Doss .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *