தேவன் யாருக்கு நன்மை செய்கிறார்

1.தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு

யாத்திராகமம் 1:17,20 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள். 

20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனர்கள். 

2.மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்

சங்கீதம் 31:19

உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! 

3.கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு

சங்கீதம் 34:10

 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 

4. தேவனிடத்தில் மனம்பொருந்திச் செவிகொடுத்தால்

ஏசாயா 1:19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். 

5. தீங்கை அனுபவிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்

ஆதியாகமம் 50:20

 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். 

6. நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது

நெகேமியா 5:19

 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும். 

Categories: தே

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *