நடுவில் இருக்கிறவர்
*செப்பனியா 3:17*
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
*நடுவில் இருக்கிறவர் என்ன செய்கிறார்*
*1. நடுவில் இருக்கிறவர் உலாவி வருவார்*
லேவியராகமம் 26:12
12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
[எந்த நிலையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்)
*2. உங்கள் நடுவில் இருக்கிறவர் அற்புதங்களை செய்கிறார்*
*யோசுவா 3:5*
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
(அதற்க்கு பரிசுத்தமாய் வாழ வேண்டும்)
*3 .அவர் நடுவில் வாசம் பண்ணி தன் ஜனத்தை கைவிடாதிருப்பார்*
*1 இராஜாக்கள் 6:13*
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
(தேவன் வைத்த ஸ்தானத்தில் இருக்க வேண்டும் அதை மாற்ற கூடாது)