நாள்தோறும்
நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
1. நாடோறும் கர்த்தரை தேட வேண்டும்.
ஏசாயா 58:2
தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள், நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
2. நாடோறும் கர்த்தரின் நாமத்தில் களிகூரவேண்டும்.
சங்கீதம் 89:16
அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
3.நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே: நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
4.நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்
எபிரேயர் 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
0 Comments