நித்தமும்
1 நாளாகமம் 16:11
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.
1. நித்தமும் விழித்திருக்கும் அனுபவம்
நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
2. நித்தமும் அவர் பந்தியில் அப்பம் புசிக்கும் அனுபவம்
2 சாமுவேல் 9:7
தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே. உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.
3. நித்தமும் அவர் சமூகத்தை தேடும் அனுபவம்
சங்கீதம் 105:4
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
4. நித்தமும் தேவனை சேவித்து பலி செலுத்தும் அனுபவம்
1 நாளாகமம் 16:37,39
பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாட முறையாகச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,
1 நாளாகமம் 16:39
கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,