புறாக்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

1) நற்செய்தி கொண்டு வந்த புறா (ஆதி 8-11)  

தண்ணீர் வற்றி விட்டது என்ற நற்செய்தியை புறா கொண்டு வந்தது. நாமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நற்செய்தியையே கூற வேண்டும். துர்செய்தி நமது வாயில் இருந்து வரவே கூடாது. (எண் 13:33, 14:1-3)

2) தீட்டுபடாத புறா  

நோவா முதலில் காகத்தை பேழையில் இருந்து வெளியே விட்டான். அதற்கு வேண்டிய ஆகாரங்கள் (பிணங்கள்) கிடைத்தபடியால் பேழைக்குள் வரவில்லை. ஆனால்  வெளியே போன புறா அசுத்தமான பிணங்களை உண்டு தன்னை தீட்டு படுத்தவில்லை. மீண்டும் பேழைக்கு வந்தது.

3) புறா கன்மலை வெடிப்புகளிலம், சகரங்களீன் மறைவிடத்தில் தங்கும் – உன் 2-14 

கன்மலை வெடிப்பு  பாடு, தேவ பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் பாடுகள் உண்டு. பாடுகளில் சோர்ந்து போக கூடாது.

4) புறா கபடற்ற பறவை (மத் 10-16)  

புறாவை போல நாமும் கபடற்றவர்களாக இருக்க வேண்டும். கபடு  நமக்கு தீங்கிழைக்க முற்படுகிறவர்கள் மேல் யாதொரு கசப்பும், வைராக்கியமும் இன்றி கபடற்றவர்களாய் நம்மை காத்து கொள்ள வேண்டும்.

5) புறா எப்போதும் புலம்பி கூவி கொண்டிருக்கும் (ஏசா 38-14, 59-11)  

இது ஜெப ஜிவியத்தை காட்டுகிறது. ஜெபம் நமக்கு ஒரு ஆயுதமாக இருக்கிறது. நாம் யுத்த களத்தில் இருக்கிறோம் – எபேசி 6:11-13

6) புறா சத்தம் (துதி) எழுப்பும் பறவை (உன் 2-12)  

தாவீது துதியின் சத்தத்தை தொனிக்க பண்ணுவேன் என்கிறான் (சங் 26-8) நமது கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் காணப்பட வேண்டும் (சங் 118-15). துதியின் சத்தம் எப்போதும் நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.

7) புறா பயந்த சுபாவம் கொண்டது (ஓசியா 11-11)  

தேவபயம் நமது வாழ்க்கையில் எப்போதும் காணப்பட வேண்டும்

8) இயேசுவுக்கு பலியாக மாறின புறாக்கள் (லூக் 2-24)  

நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் (ரோ 12-1)

9) தண்ணீர் நிறைந்த நதிகள் ஒரமாய் தங்கும் புறா (உன் 5-12)  

நமது வேர் நீர்க்கால்கள் ஒரமாக இருக்க வேண்டும் (ஏரே 17-8). அப்போதுதான் கனி கொடுக்க முடியும். நீர்க்கால்கள் ஒரமாக நமது வேர் செல்ல நாம் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிக்க வேண்டும். (சங் 1-3)

10) பலகணி துவாரங்களுக்கு திவிரிக்கிற புறா (ஏசா 60-8) 

புறாக்கள் மாலை மயங்கும் வேளையில் தங்கள் கூடுகளை நோக்கி திவிரித்து செல்லும்  இரகசிய வருகையில்  ஆண்டவரை சந்திக்க பறந்து சொல்வோம் (1 தெச 4-17, ஏசா 60-8)

11) மணவாட்டியை வேத வசனம் புறாவுக்கு ஒப்பிடுகிறது – உன் 6-9

Categories: பு

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *