பெரிய காரியங்கள்
வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்
1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் – மீதி 12 கூடை எடுத்தல் – மத் 14:14-21
2) எலிசாவின் சால்வை – எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது. – 2 இராஜ 2:7,8
3) கிதியோனின் மண்பானைகள் – மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள் – நியாதி 7:16-25
4) கழுதையின் பச்சை தாடை எலும்பு – சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான் – நியாதி 15:14,15
5) மோசேயின் ோ் (தேவனுடைய கோல்) – பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.
6) ஆரோனின் கோல் – அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது – எண்ணா 17:1-10
7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு – எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடாரி மிதந்து வந்தது – 2 இராஜ 6:1-7
8) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல் – எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள் – யோசு 2:1-24
9) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும் – தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான் – 1 சாமு 17:40-54
10) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும் – இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது – அப்போ 19:11,12
11) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள் – அப்போ 27:1-44
12) ஒரு குடம் எண்ணெய் – கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது – 2 இராஜ 4:2
0 Comments