தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை
1) தேவன் எதிர்த்து நிற்கிறார் – யாக் 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் – நீதி 15:25
4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது – யோபு 35:12
5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் – நீதி 6:16,17
6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் – சங் 138:6
7) கர்த்தருக்கு அருவருப்பானவன் – நீதி 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் – சங் 18:27
மேட்டிமை/பெருமை இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் காணப்படும்
1) அதிகம் பேச்சு காணப்படும் – நீதி 30:32
2) சண்டை காணப்படும் – நீதி 13:10
3) கோப காணப்படும் – 2 நாளா 26:16,19
4) கர்த்தரை தேட மாட்டோம் – சங் 10:4
5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் – சங் 10:3
6) இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் – யாக் 3:14-16
7) மற்றவர்களின் குறை பெரிதாக தெரியும் – லூக் 18:11-14
8) தங்களிடம் இருக்கும் குறைகள் தெரியாது – லூக் 18:11-14
மேட்டிமை/பெருமையின் விளைவு
1) தாழ்த்தப்படுவோம் – நீதி 29:23
2) அழிவு வரும் – நீதி 18:12
3) ஜெபம் கேட்கபட மாட்டாது – லூக் 18:11,12
4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் – சங் 10:2
5) அறுப்புண்டு போவான் – லேவி 23:29
6) விழுதல் காணப்படும் – நீதி 16:18
7) பைத்தியமான நடக்கை – நீதி 30:32
8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் – லூக் 1:51,52
வேதத்தில் உள்ள பெருமைகள்
1) ஜீவனத்தின் பெருமை – 1 யோ 2:16
2) மனுஷனுடைய பெருமை – யோபு 33:17
3) பெலத்தின் பெருமை – எசேக் 33:28
4) பொல்லாதவர்களின் பெருமை – யோபு 35:12
5) அகங்காரனின் பெருமை – ஏசா 13:11
6) மோவாபின் பெருமை – ஏசா 48:29
7) யூதாவுடைய பெருமை – ஏரே 13:9
8) வல்லமையின் பெருமை – லேவி 26:19