மனந்திரும்புதல்


 மனந்திரும்புதல்

1.யோவான்ஸ்நானகனின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள்.

“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.” மத்தேயு 3:2

2.இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள்.

“இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” மத்தேயு 4:17

3.பன்னிரண்டு சீஷர்களின் பிரசங்க ஊழியத்தின் முதல் பிரசங்கம் – மனந்திரும்புங்கள்.

“அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து,” மாற்கு 6:12

4. உயிர்த்தெழுந்த கர்த்தர் முதலில் பிரசங்கிக்க கட்டளையிட்டது மனந்திரும்புதல்,

“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசவேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படனும் வேண்டியது.” லூக்கா 24:47

5.ஆதினிசுவாசத்தின் முதல் போதனை – மனந்திரும்பி.

“நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” அப் 2:38

6.பவுலின் ஊழியத்தில் அவர் பிரசங்கித்த முக்கிய செய்தி – மனந்திரும்புவதைக்குறித்து.

“தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும். சாட்சியாக அறிவித்தேன்.”அப் 20:26, 26:20

7. ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்தியில் முதல் ஆலோசனை – மனந்திரும்பி.

“மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக”

வெளி 2:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *