முன்வைத்த காலை பின்வைக் காதவர்கள்… (எபி 11:15,16)
காரணம்: விட்டு வந்தவைகள், அவர்கள் நினைவிற்கு வரவில்லை.
-(எபி 11:15)
1- ஆபிரகாமின் கால்கள் மொசப்பத்தோமியாவிற்கு பின்வாங்கவில்லை, பரம தேசத்தை ஆண்டவர் ஆயத்தம்பண்ணியதால்
2- மோசேயின் கால்கள் எகிப்தின் பொக்கிஷங்களை நாடி, பின்வைக்கப்படவில்லை, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையே அதிக பாக்கியமாக, அவனுக்கு தோன்றியதால்.
3- எலிசாவின் கால்கள், எலியாவைவிட்டு பின்வைக்கப்படவில்லை, இரட்டிப்பான ஆவியின் வரத்தை, அவன் வாஞ்சித்ததினால்.
4- உரியாவின் கால்கள், வீட்டிற்கு செல்லும்படி பின்வைக்கப்படவில்லை, தேவனுடைய உடன்படி்கை பெட்டி, யுத்தகளத்தில் இருந்ததினால்.
5- ரூத்தின் கால்கள், நகோமியை விட்டுவிட்டு, மோவாபிற்கு திரும்பவில்லை, இஸ்ரவேலின் தேவனை அவள் தெரிந்துகொண்டதினால்.
6- மத்தேயுவின் கால்கள், ஆயத்துறைக்கு திரும்பவில்லை, தான் எழுதும் சுவிஷேசம், சக ல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதமாக இருப்பதினால்.
7- பேதுருவின் கால்கள், பிறரைப் போன்று பின்வைக்கப்படவில்லை, நித்திய ஜீவ வசனத்தின்மீதான வாஞ்சையினால்.
0 Comments