வல்லவர்கள்
1. விசுவாசத்தில் வல்லவன்
(ஆபிரகாம்)
ரோமர் 4:21(1622); ஆதியாகமம் 15:16
[21]தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்
2. வில்வித்தையில் வல்லவன்
(இஸ்மவேல்)
ஆதியாகமம் 21:20(1220)
[20]தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
3. வேட்டையில் வல்லவன்(ஏசா)
ஆதியாகமம் 25:27(2027)
[27]இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனஞ்சரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
4. வேதத்தில் வல்லவன்
(அப்பொல்லோ)
அப்போஸ்தலர் 18:24(2428)
[24]அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
5. வாக்கில் வல்லவன்(மோசே)
அப்போஸ்தலர் 7:22(2037)
[22]மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
0 Comments