வார்த்தையின் வல்லமை


 

 வார்த்தையின் வல்லமை

   

மத்தேயு 8:8(5-10)

[8]நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; *ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்;* அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

1. ஆகக்கடவது

மத்தேயு 9:29

[29]அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது* என்றார்.

மத்தேயு 8:13; மத்தேயு 18:28 

2. வீட்டுக்குப் போ

மாற்கு 2:11 

[11]நீ எழு்து, ன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3. கையை நீட்டு

மாற்கு 3:5(1-5) 

[5]அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

4. இரையாதே

மாற்கு 4:39(35-41)

[39]அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே , அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று.

5. தலீத்தாகூமி

மாற்கு 5:41

[41]பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

6. புறப்பட்டுப் போ

மாற்கு 5:8(1-20)

[8]ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.

7. சுத்தமாகு

 லூக்கா 5:12,13 

[13]அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

8. எழுந்திரு

லூக்கா 7:14(11-16) 

[14]கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

9. வெளியே வா

யோவான் 11:43(1-45

[43]இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *