விசுவாசியுங்கள்
அவன் கர்த்தரை விசுவாசித்தான்; அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ரோம 4:23)
கருப்பொருள் : யாரை/எதை விசுவாசிக்க வேண்டும்?
தலைப்பு : விசுவாசியுங்கள்
ஆதார வசனம் : ரோம 4:23
துணை வசனம் : மத் 8:13; மாற் 9:23; யோவா 1:12
1. தேவனை விசுவாசிக்க வேண்டும் (மாற் 9:23)
-
ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தார் (ஆதி 15:6)
-
தானியேல் தேவனை விசுவாசித்தார் (தானி 6:23)
-
பேதுரு இயேசுவை விசுவாசித்தார் (ா 6:69)
2. குமாரனை விசுவாசிக்க வேண்டும் (யோவா 4:41)
-
குமாரனை விசுவாசிக்கிறவன் உலகத்தை ஜெயிக்கிறான் (1யோவா 5:5)
-
குமாரன் நாமத்தின்மேல் விசுவாசம் வைக்க வேண்டும் (1யோவா 5:13)
-
குமாரனை விசுவாசிக்கிறவன் தேவனால் பிறந்தவன் (1யோவா 5:1)
3. தேவனின் வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும் [சங் 106:12]
-
தேவனின் வார்த்தையை இஸ்ரவேலர் விசுவாசித்தார்கள் (சங் 106:12)
-
நூற்றுக்கு அதிபதி இயேசுவின் வார்த்தையை விசுவாசித்தான் (மத் 8:13)
-
சீஷர்கள் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தார்கள் (யோவா 2:22)
4. தேவனின் வல்லமையை விசுவாசிக்க வேண்டும் (மத் 9:28)
-
இரண்டு குருடர் தேவ வல்லமையை விசுவாசித்தார்கள் (மத் 9:28)
-
வல்லமையைக் குறித்து தப்பான எண்ணங்கொள்ளக் கூடாது (மத் 22:29)
-
உத்தமமுள்ளோருக்கு வல்லமையை விளங்கப்பண்ணுகிறார் (2நாளா 16:9)
5. சுவிசேஷத்தை விசுவாசிக்க வேண்டும் (மாற் 1:15)
-
சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு நிலைத்திருக்க வேண்டும் (1கொரி 15:1)
-
விசுவாசிக்கிறவர்களுக்குள் இரட்சிப்பு உண்டாகிறது (ரோம 1:16)
-
விசுவாசம் விருத்தியாக வேண்டும் (2கொரி 10:16)
6.தேவ அன்பை விசுவாசிக்க வேண்டும் (1யோவா 4:16)
-
அன்பினால் தம் ஒரே பேரான குமாரனைத் தந்தார் (1யோவா 4:14)
-
நம் பாவங்களுக்காக மரிக்கும்படி குமாரனை அனுப்பினார் (ரோம 5:8)
-
தேவன் அன்பாகவே இருக்கிறார் (1யோவா 4:16)
7. தேவனின் கிரியைகளை விசுவாசிக்க வேண்டும் (யாக் 1:8)
-
தம்மைத் தேடுவோருக்கு பலன் அளிக்கிறார் (எபி 11:6)
-
தம்மை நோக்கிக் கூப்பிடுவோருக்கு பதில் அளிக்கிறார் (மத் 7:7)
-
தம்மை நோக்கி கெஞ்சும்போது இரங்குகிறார் (யாத் 32:13,14)
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொ்னபடியே நடக்கும் என்று இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் (மாற் 11:23)
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோம 10:9)